Wednesday, January 29, 2020

ராணுவ வீரர் குழந்தைக்கு சி.பி.எஸ்.இ., தேர்வில் சலுகை

சி.பி.எஸ்.இ., தேர்வில் ராணுவ வீரர் மற்றும் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்கைளுக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்கி உள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான 'ப்ளஸ் 2' மற்றும் 10வது பொது தேர்வு பிப். 15ல் துவங்குகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு இந்த தேர்வில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இதன்படி தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயல் விளக்க தேர்வை தவறவிடும் மாணவர்கள் வேறு தேதிகளில் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவர் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment