Sunday, October 28, 2018

மது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம் 

சேலம் அருகே மது அருந்தி அரசுப் பள்ளிக்கு வந்த 3 மாணவர்களை 15 நாட்கள் இடைநீக்கம் செய்து பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த சாத்தப்பாடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்கள் மது குடித்து விட்டு வகுப்புக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில், பள்ளிக்கு வந்து விசாரித்தார். மேலும், இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீஸார் 3 மாணவர்களையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். மருத்துவச் சோதனையில் மாணவர் கள் மது அருந்தியது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து, பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, 3 மாணவர்களையும் 15 நாட்களுக்கு பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கும், அவரது பெற்றோருக்கும் மனநல மருத்துவர் கள் மூலம் கவுன்சலிங் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment