அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று நடக்க உள்ள உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு
தெரிவித்துள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இருந்தும், அரசு நடவடிக்கை எடுக்காததால், டிச., 4 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, பேச்சுக்கு வரும்படி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு, அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.நேற்று, தலைமை செயலகத்தில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமையில் பேச்சு நடந்தது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால், பேச்சில் தீர்வு ஏற்படவில்லை.இது குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சு நடந்தது. எங்கள் கோரிக்கைகளை விரிவாக விளக்கினோம். 'அமைச்சர் ஏதேனும் ஒரு உறுதிமொழி தருவார்' என, எதிர்பார்த்தோம்; எந்த உறுதிமொழியையும் தரவில்லை. 'உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்' என்றார்.'இன்று எங்கள் அமைப்பின், உயர்மட்ட குழு கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு வருவோர், போராட்டத்தை நிறுத்த ஒப்புக் கொள்ள மாட்டார்கள்' என்று வலியுறுத்தியும், அமைச்சர் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வரிடம் அழைத்து செல்லவும் அவர் ஒப்புதல் தரவில்லை.இன்று நடக்கும் உயர்மட்ட குழு கூட்டத்தில், இதுகுறித்து விவரிப்போம். உயர்மட்ட குழு கூறுவதை, இறுதி முடிவாக அறிவிப்போம். பேச்சு முடியவும் இல்லை; முறியவும் இல்லை. அதற்குள், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வர் எங்களை அழைத்து பேசுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment