Sunday, January 27, 2019

'ஜாக்டோ - -ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் சிறையிலடைப்பு

 விருதுநகரில் 'ஜாக்டோ -- ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.ஜாக்டோ -- ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு முக்கிய
நிர்வாகிகளை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து மற்றவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போலீசாரின் கடும் நெருக்கடிக்கு பின் பேச்சுவார்த்தையில் மற்ற உறுப்பினர்கள் வெளியேறினர். ஜாக்டோ -- ஜியோ நிர்வாகிகள், வருவாய்த்துறை மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ராமநாதன், நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்க தலைவர் வைரவன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி கணேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட 35 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நேற்று காலை விருதுநகர் மாஜிஸ்திரேட் 2 திலகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். 35 பேரையும் பிப்., 8 வரை ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment