*தமிழக அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்புவரையில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின்எண்ணிக்கை குறித்து சமூக நலத்துறை ஆய்வுநடத்தியுள்ளது.ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909அரசுப் பள்ளிகளில், இருபத்து ஐந்துக்கும்குறைவானமாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.
* குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள்அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில்,முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம்முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
* இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர்மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம்மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர்,திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில்அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையனின் தொகுதிஅமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில்உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசுபள்ளிகள்குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது.
* சென்னையில், 55 பள்ளிகளில் குறைவானமாணவர்கள் உள்ளனர். இந்த முடிவுகள்அனைத்தும்சமூகநலத்துறை மேற்கொண்டஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment