Monday, April 29, 2019

12ம் வகுப்பு மாணவிக்கு 0 மதிப்பெண் வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 12ம் வகுப்பிற்கான இடைநிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் 9.74 லட்சம்
மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 3.28 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. அம்மாநில அரசு தேர்ச்சி அடையாத 3.28 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்தது. இந்த தேர்வில் 12ம் வகுப்பைச் சேர்ந்த நவ்யா எனும் மாணவி 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் 0 மதிப்பெண் வழங்கியது கண்டறியப்பட்டது. உமா தேவி எனும் தனியார் பள்ளி ஆசிரியை இந்த விடைத்தாளை திருத்தியதாக தெரிய வந்துள்ளது.

உமா தேவிக்கு இடைநிலைத் தேர்வு ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்து உள்ளது.

No comments:

Post a Comment