தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,விளையாட்டு மைய விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறந்த பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய, 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி செயல்பட்டு வருகின்றன. இதேபோல், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதில், சேர விருப்பம் உள்ள 6 ம் வகுப்பு, 7 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் வரும் மே 21ம் தேதி காலை 8:00 மணிக்கு நடைெபறும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், மே 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment