பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், வழக்கம் போல்
மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றனர்.
இருப்பினும், பாட வாரியாக தேர்ச்சி சதவீதத்தைப் பார்த்த போது, அதிர்ச்சியே மிஞ்சியது. மற்ற பாடங்களை விட தமிழில் குறைவான தேர்ச்சி பெற்றிருப்பது தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில்தான் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம், பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, வேதனிக்குரியதுதான்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர்.
இந்நிலையில் இந்தத் தேர்வில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவிகித பேரும் மாணவிகள் 97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில்…
அறிவியல்- 98.56%
ஆங்கிலம்- 97.35 %
சமூக அறிவியல்- 97.07%
கணிதம்- 96.46%
தமிழ்- 96.12 % - என்று உள்ளதில், தமிழ் கடைசி இடத்தில் உள்ளது.
ஆங்கிலம்- 97.35 %
சமூக அறிவியல்- 97.07%
கணிதம்- 96.46%
தமிழ்- 96.12 % - என்று உள்ளதில், தமிழ் கடைசி இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment