Tuesday, April 30, 2019

கரூர் மாவட்ட கல்வி அதிகாரி திடீர் சஸ்பெண்ட்

கடந்த ஐந்து மாதங்களாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ)
பணியாற்றியவர் தங்கவேல். இவர் இன்றுடன் (30ம் தேதி) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் இவரை பள்ளிக் கல்வித்துறையினர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். தங்கவேல் சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய போது, பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இது கரூர் மாவட்ட கல்வித்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment