Wednesday, June 26, 2019

கணினி ஆசிரியர் மறுதேர்வு; இன்று போராட்டம்

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வில், 'காப்பி' அடித்த விவகாரத்தில், நாளை(ஜூன் 27) மூன்று மையங்களில், மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, இன்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், கும்பகோணம், அன்னை இன்ஜி., கல்லுாரி, திருச்சி, கொங்குநாடு இன்ஜி., கல்லுாரி மற்றும் திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்.கல்லுாரி ஆகிய மையங்களில், நாளை மறு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 1,221 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கே, தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என, தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment