அரசு பள்ளிகளில் இரவு காவலர்களாக பெண் ஊழியர்களை பள்ளிக்கல்வி துறை நியமனம் செய்துஉள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றிய துப்புரவாளர், தோட்டக்காரர், நீர் கொணர்பவர் பணியிடங்களை
ஒழித்து விட்டு அதில் பணியாற்றியவர்களை இரவு நேர காவலர்களாக அரசு நியமித்து வருகிறது. சிவகங்கை கல்வி மாவட்டத்தில் இப் பணியிடங்களில் பணியாற்றிய 13 பேரில் 8 பேர் பெண்கள். தற்போது அவர்களையும் இரவு காவலர்களாக நியமிக்கின்றனர்.பெரும்பாலான இடங்களில் அரசு பள்ளிகள் ஒதுக்குப்புறமாக அல்லது ஊரை விட்டு தள்ளி இருக்கும். ஆண்களே இரவு பணி பார்க்க அச்சப்படுவர். அங்கு பெண் ஊழியர்கள் இரவு காவலர்களாக பணியாற்றுவது பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இருப்பினும் பெண்களுக்கு இரவு நேர காவலர் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை கல்வி மாவட்ட அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபடியே பெண்களும் இரவுநேர காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

No comments:
Post a Comment