கடம்பூர் மலைப் பகுதியில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில், வகுப்பறை இல்லாததால், தற்காலிக கூரையின் கீழ் அமர்ந்து, மாணவர்கள் படிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப் பகுதியில், குன்றி யூனியன், குஜ்ஜம்பாளையம் கிராமத்திநிலைப் பள்ளியில், 130க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படித்தனர்.ஓராண்டுக்கு முன், அரசு உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை, 220 பேராக அதிகரித்தது.தரம் உயர்ந்த பின், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு கட்டடம் கட்டவில்லை. இதனால், 80 மாணவ - மாணவியர், வகுப்பறையின்றி தவித்தனர்.ஆசிரியர்கள், பெற்றோரின் முயற்சியால், பள்ளியின் முன்புற காலியிடத்தில், மூங்கில், தார்ப்பாய் மூலம் கூரை அமைத்து, தற்காலிக வகுப்பறை ஏற்படுத்தியுள்ளனர். அதில் தான், மாணவர்கள் படித்து வருகின்றனர்.மழை காலங்களில் ஒழுகுவதால், வகுப்பறையில் அமரக் கூட இடமின்றி, மாணவர்கள் தவிக்கின்றனர். குடிநீர் வசதியும் இல்லாததால், 1 கி.மீ., சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர்.மாவட்ட கல்வி அதிகாரிகள், வகுப்பறைகள் கட்டித் தந்து, பள்ளி வளாகத்திலேயே குடிநீர் வசதிக்கும் ஏற்பாடு செய்ய, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment