காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது' என, ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதை தொடர்ந்து பரவிய வதந்தியால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
காலாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக, நேற்று காலை முதல், வதந்தி பரவியது. 'குழப்பம்'தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவரும், சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியருமான இளமாறன், அனைத்து ஊடகத்தினருக்கும், 'வாட்ஸ் ஆப்'பில் அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், கூறியிருந்ததாவது:தமிழக அரசின், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்ககம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 23 முதல், அக்., 2 வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், அவரது வாழ்க்கை மற்றும் அவரின் மதிப்புகளை நிகழ்ச்சிகளாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மனம் மகிழ, விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் ஆசையில், இடி விழுந்த மாதிரி உள்ளது. மாணவர்களின் கனவுகளை கசக்கி எறியும் போது, கற்றலில் எப்படி மனசு செல்லும்?காந்தியின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள, விடுமுறை நாட்களை தேர்வு செய்தால், அது, உண்மையில், மாணவர்கள் உள்ளத்தில் பதியுமா என்பது கேள்விக்குறியே. சொந்த ஊரை விட்டு, வெளியூரில் வசிக்கும் ஆசிரியர்கள், விடுமுறை காலத்தில் தான், குடும்பங்களுடன் வாழ முடியும். எனவே, பள்ளி கல்வியின் மாநில திட்ட, இயக்குனரகத்தின் சுற்றறிக்கை, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பதற்றம்இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறியிருந்தார். அத்துடன், மாநில திட்ட இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையின் நகலையும், ஆசிரியர் இளமாறன் அனுப்பியிருந்தார். இந்த சுற்றறிக்கை, ஊடகங்களிலும், பொதுமக்களின் வாட்ஸ் ஆப்பிலும் பரவியது. காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என, பலரும் வதந்தி கிளப்பியதால், நேற்று தேர்வுக்கு சென்ற மாணவர்களும், தேர்வை நடத்திய ஆசிரியர்களும் பதற்றம் அடைந்தனர்.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'காலாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என்ற தகவல் வதந்தி. திட்டமிட்டபடி விடுமுறை உண்டு. இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது, சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.

No comments:
Post a Comment